Sunday 27 April 2014

பகவான் ஸ்ரீ.ராமகிருஷ்ணரின் தெய்வீகக் காட்சி


ஒரு நாள் என் மனம் ஓர் ஒளிப்பாதை வழியாக மேலே சென்றது. சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய தூல உலகை விரைவாகக் கடந்து, எண்ணங்களால் ஆகிய நுண்ணுலகில் அது நுழைந்தது. மனம் அந்த உலகில் ஆழ்ந்து மேலே செல்லச்செல்ல பாதையின் இருபுறங்களிலும் பல்வேறு தேவதேவியர் உணர்வு திரண்ட உருவத்துடன் நின்றிருந்தனர். மனம் படிப்படியாக அந்தப் பகுதியின் இறுதியை அடைந்தது. அங்கே, அந்த உன்னத உலகில், தெய்வீக ஒளியினாலான உடம்புடன் கூடிய ஏழு ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தனர். ஞானம், புனிதம், தியானம், அன்பு என்று அனைத்திலும் அவர்கள் தேவதேவியரையும் விஞ்சியவர்களாக இருந்தனர்.

அந்த ரிஷிகளைப்பற்றியும் அவர்களின் மகிமையைப்பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அந்த ஒளித்திரள் ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்த தெய்வீகக் குழந்தை அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளில் ஒருவரிடம் வந்து தன மென்மையான கைகளால் அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு, வீணையை மிஞ்சும் அமுதக் குரலால் அந்த ரிஷியிடம்,             " நான் போகிறேன்". நீ என்னுடன் வரவேண்டும்" என்று கூறியது. அவரது கருணைமயமான கண்கள் இதயப்பூர்வமான இசைவினை வெளிப்படுத்தின. அப்போது ரிஷியின் உடல் மற்றும் மனத்தின் ஒரு பகுதி ஒலியுறுப்
பெற்று கீழே பூமியை நோக்கி விரைந்தது. நரேந்திரனைக் (சுவாமி   விவேகானந்தர்) கண்டதும், அவனே அந்த ரிஷி என்பதை அறிந்துகொண்டேன்...

No comments:

Post a Comment